Friday, March 19, 2010

சித்தர்கள் அநேகம் பேர் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களில் தனிச் சிறப்பு பெற்றவர்கள் பதினெட்டு பேராக இருக்கலாம். அப்படியே ஆனாலும் பதினெட்டு சித்தர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றாக இல்லை. அவர்கள் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது பதினெட்டு என்ற சொல்ல எப்படி வந்தது?

நம்முடைய புராணங்களிலும், இலக்கிய வரலாற்றிலும், என் சாஸ்திரத்திலும் 18 என்ற எண்ணுக்குப் பல சிறப்புகள் உண்டு. 18 என்பது, 9ம் எண்ணின் பெருக்குத் தொகை. 9து2=18. அதே சமயம் 1+8 ஐக் கூட்டினால் 9ம் எண் வரும். அதேபோல 9ம் எண்ணின் பெருக்குத் தொகையான 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99, 108, 117, ஆகிய எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 2+7, 3+6, 4+5, 5+4, 6+3...... 9 என்ற எண் வரும்.
தேவ கணங்களின் எண்ணிக்கை மொத்தம் 18. யுகங்களின் எண்ணிக்கை 18. தமிழ்நாட்டின் இசைக்கருவிகளின் எண்ணிக்கை 18. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடைபெற்ற தேவாசுரப்போர் 18 ஆண்டுகள் நடைபெற்றது. இராமாயணத்தில் இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போர் 18 மாதங்கள் நடந்தது. மகாபாரத யுத்தம் 18 நாட்கள் நடந்தது. சேர அரசன் செங்குட்டுவனுக்கும், வடநாட்டை ஆண்ட கனக விசயர்க்கும் நடந்த போர் 18 நாழிகை நடைபெற்றது.
ஆடி மாதத்தில் 18ம் நாளை, ஆடி 18ம் பெருக்கு �ன்று சிறப்பாகத் தமிழ்நாட்டில் கொண்டாடுகிறார்கள். வேதங்களின் விளக்கமாக இருக்கும் ஆகமங்கள் மொத்தம் 18 ஆகம். தமிழ் இலக்கியத்தில் 18 நூல்களை பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்றும், 18 நூல்களை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். தமிழின் மெய்யெழுத்துக்கள் 18. சபரி மலையின் படிக்கட்டுகள் 18. இவ்வாறு 18 என்ற எண்ணின் சிறப்புப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
மற்றொரு சிறப்பு 18 என்ற எண்ணின் கூட்டுத் தொகையான 9 என்ற எண், சோதிட சாஸ்திரத்தில் கேது என்னும் கிரகத்துக்குரியது. கேது, பாபகிரகம் என்ற சொல்லப்படுகிறது. அதே சமயம் ஞானகாரகன் கேது என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. 9 என்னும் கூட்டுத் தொகையை உடைய 18 என்ற எண்ணும் லூனத்துக்கு உரியதே. சித்தர்கள் ஞானிகள். அதனால் பதினெட்டு சித்தர்கள் என்று கூறும் மரபு ஏற்பட்டிருக்கலாம். அப்படி என்றால் 9 என்னும் கூட்டுத் தொகையை உடைய 27, 36, 45, 54 முதலிய எண்களைச் சொல்லியிருக்கலாமே. ஏன் பதினெட்டு என்று குறிக்க வேண்டம் என்ற சந்தேகம் வருகிறது.
பதினெட்டு தேவ கணங்களுள் சித்தர் கணமும் ஒன்ற. கணம் என்பது ஒர கூட்டம். தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும். எனவேதான் தேவகணங்களுக்குத் தலைவரை கணபதி என்ற வணங்குகிறோம். இதே போல சித்தர்கள் தங்கள் தலைவனான பதியைத் தமக்குள் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள். எனவே பதினெட்டு சித்தர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்..சித்தர்கள் அநேகம் பேர் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களில் தனிச் சிறப்பு பெற்றவர்கள் பதினெட்டு பேராக இருக்கலாம். அப்படியே ஆனாலும் பதினெட்டு சித்தர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றாக இல்லை. அவர்கள் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்திருக்கவில்லை. அப்படி இருக்கும்போது பதினெட்டு என்ற சொல்ல எப்படி வந்தது?

பதினெட்டு தேவ கணங்களுள் சித்தர் கணமும் ஒன்ற. கணம் என்பது ஒர கூட்டம். தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும். எனவேதான் தேவகணங்களுக்குத் தலைவரை கணபதி என்ற வணங்குகிறோம். இதே போல சித்தர்கள் தங்கள் தலைவனான பதியைத் தமக்குள் உணர்ந்து தெளிவு பெற்றவர்கள். எனவே பதினெட்டு சித்தர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்..

சுவாமி நித்யானந்தா விவகாரம் தொடர்பான படக் காட்சிகள் தனியார் தொலைக்காட்சி, நாளிதழ், வார இதழில் வெளியானதைத் தொடர்ந்து, ஆன்மிகவாதிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர்.குறிப்பாக, ஆசிரமங்களையும், ஆன்மிகப் பயிற்சி நிலையங்களையும் தலைமைப் பொறுப்பேற்று, நடத்தி வரும் நல்ல இந்து சமயத் தலைவர்களுக்குக்கூட பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.நித்யானந்தா விவகாரத்தைத் தொடர்ந்து, கல்கி ஆசிரமம் குறித்தும் சர்ச்சைகள் உருவாகியுள்ளன. இதற்கு முன்பாகக்கூட பல்வேறு காலகட்டங்களில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்ட சாமியார்கள் குறித்து சர்ச்சைகள் உருவாகியுள்ளன.திருவள்ளுவர் காலத்திலேயே இத்தகைய போலிச் சாமியார்கள் இருந்த காரணத்தினால்தான், அவர் "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்'-என்கிற குறட்பாவை இயற்றியுள்ளார்.பொதுவாக, சாமியார்கள் என்று சொன்னால், துறவிகள் என்று அர்த்தம் செய்து கொள்கிறார்கள். ஓர் இடத்தில் நில்லாமல், பல இடங்களுக்குச் சுற்றித் திரிந்து, ஆன்மிக அனுபவம் பெறுபவர்களை சந்யாசிகள் என்பர். பந்தபாசங்களைத் துறந்து, பற்றற்ற நிலையில் இருப்பவரைத் துறவி என்பர்.மி நித்யானந்தா விவகாரம் தொடர்பான படக் காட்சிகள் தனியார் தொலைக்காட்சி, நாளிதழ், வார இதழில் வெளியானதைத் தொடர்ந்து, ஆன்மிகவாதிகள் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். பிற மதங்களிலும் இத்தகைய போலிகள் உள்ளனர். ஆனால், அவர்கள் குறித்த செய்திகளையோ, படக்காட்சிகளையோ ஒளிபரப்புவதற்கு யாருக்கும் துணிச்சல் கிடையாது. நடந்த தவறை நியாயப்படுத்தவில்லை. ஆனால் நியாயம் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவாக இல்லையே என்று ஆதங்கப்படுகிறோம்.பிற மதங்களிலும் இத்தகைய போலிகள் உள்ளனர். ஆனால், அவர்கள் குறித்த செய்திகளையோ, படக்காட்சிகளையோ ஒளிபரப்புவதற்கு யாருக்கும் துணிச்சல் கிடையாது. நடந்த தவறை நியாயப்படுத்தவில்லை. ஆனால் நியாயம் என்பது அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவாக இல்லையே என்று ஆதங்கப்படுகிறோம்நித்யானந்தாவை இந்து சமய உணர்வாளர்களே கண்டிக்கின்றனர். அதே நேரத்தில் தமிழக முதல்வரே கண்டிக்கும் அளவுக்கு ஆபாசக் காட்சிகளை வெளிப்படுத்திய ஊடகங்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்..
நீர்வை மயூரகிரி.

அறிந்து கொள்வோம் நம் ஆன்மீகத்தலைவர்களை….
செம்மைவழி காட்டிய செல்லத்துரைசுவாமிகள்
ஒரு சில கசப்பான சம்பவங்களையடுத்து இந்துக் குருமார்கள், இந்துத்துறவிகள் மீது கண்டபடி குற்றம் சுமத்த இந்துவிரோதிகளும் மதமாற்றச் சக்திகளும் மதங்களுக்கு எதிரான நாத்தீகவாதிகள் சிலரும் வருமானத்தையே ஒரே குறிக்கோளாகக் கொண்ட மீடியாக்களைச் சேர்ந்த சிலரும் தமிழகத்திலும் இலங்கையிலும் முனைப்போடு ஈடுபட்டு வருகின்றனர்.மேலும்->>>இந்த நிலையிலேயே யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘வலம்புரி’ நாளிதழ் 05.03.2010 அன்று தனது ஆசிரியத்தலையங்கத்தில் ‘இந்து மதத்திற்கு எதிராக திட்டமிட்ட முறையில் சதித்திட்டங்கள் இடம்பெறுவதாகவே கருதவேண்டியிருக்கிறது’ என்று கருத்துத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.குறித்த ஒரு சிலர் இந்துத்துறவி வேடம் பூண்டு மக்களை ஏமாற்றியிருக்கலாம். ஆனால் காலகாலமாக நம்மிடையே உயரிய துறவிகள் அதிபரிசுத்தராக உலவியிருக்கிறார்கள். இன்றைக்கும் அவ்வாறான பல துறவற உத்தமர்கள் இந்த உலகில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை விவரிக்க வேண்டிய அத்தியாவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.இந்த வகையில் மிக அண்மையில் நம்மோடு வாழ்ந்த நாம் கண்ணாரக் கண்ட யாழ்ப்பாணத்துத் துறவரசர் ‘சிவத்தொண்டன் ஸ்ரீமத் செல்லத்துரை’ சுவாமிகளாவார். அன்னாருடைய 04வது ஆண்டு குருபு+ஜைத் திருநாளும் வரும் பங்குனிப்பபூரணையில் வரும் நிலையில் சுவாமிகளைப் பற்றிச் சிந்திப்பது பொருத்தமான ஒன்றாயிருக்கும். என்று கருதுகிறோம்.நீர்வேலியூரில் வரலாற்றுச்சிறப்புடைய அரசகேசரிப் பெருமானின் அருளாட்சி நிறைந்த பகுதியில் 1914ல் ‘ஆனந்தம்பிள்ளை’ என்ற இயற்பெயருடன் பிறந்த சுவாமிகள் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் கல்விகற்று ஆங்கிலம், தமிழ்,சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் பயிற்சி பெற்றதுடன் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் ஆசிரிய பயிற்சியும் பெற்று தென்னிலங்கையில் ஆசிரியப்பணி புரிந்தார்.நல்லாசிரியனாயிருந்த சுவாமிகள் பிரம்மச்சாரியத்தையும் உறுதியோடு பேணிவந்தார். இந்த நிலையிலேயே யோகர் சுவாமியை ஒருமுறை கொழும்பில் சந்தித்தார். அப்போது யோகர் பெருமான் நம் செல்லத்துரை(சுவாமிகள்) அவர்களிடம் ‘நீ உன்னை அறிந்திருப்பதை விட நான் உன்னை நன்கறிவேன்’( I know you man better than you know you) என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டார். அப்போது செல்லத்துரை தமக்கிருக்கும் துறவற நாட்டத்தை வெளிப்படுத்தினார். யோகரோ ‘தம்பிமாரே இப்போது உத்தியோகத்தை மாத்திரம் விட்டு விடாதீர்’ என்று கண்டிப்பாக அறிவுறுத்தி ஆசீர்வதித்தார். அப்போது செல்லத்துரை அவர்கள் நுவரெலியாவில் இறாகலையில் ஒரு கல்லூரி முதல்வராக இருந்தார்.எனினும் தொடர்ந்தும் செல்லத்துரை அவர்கள் விடுமுறை நாட்களில் யோகர் சுவாமிகளிடம் ஆன்மீக சாதனை பெறுவதும் கதிரமலையிலும் செல்வச்சந்நதியிலும் நல்லூரிலும் தியானம் செய்வதும் தொடர்ந்தது. இக்காலத்தில் பல அரிய ஆன்மீக அனுபவங்களை செல்லத்துரை சுவாமிகள் பெற்றிருக்கிறார்.செல்வச்சந்நதியில் ஓரு நாள் தியானம் செய்த போது செல்லத்துரை அவர்களுக்கு ‘கடவுள் வழிபாடு என்பது சில வேளை முன்னோர் வழிவந்த மூடப்பழக்கமா? கற்பனை தானா?’ என்ற எண்ணம் உருவாயிற்று. இந்த வேளையில் ஒரு மனிதன் அருகில் தாங்கொணாத வலியால் துடிதுடித்து விழுந்து அழுது புலம்பிக்கொண்டிருந்தது தெரிந்தது. உடனே அவரது வலியை இப்பொழுதே போக்க முடியுமாகில் அது கடவுள் உண்மைக்கு கண்கண்ட சாட்சியாயிருக்கும் என்ற எண்ணப்பாங்குடன் சந்நதியானுடைய தீர்த்தக்குளத்தில் கைப்பிடி நீரெடுத்து அந்த நோயாளியருகில் சென்று குடிக்குமாறு கொடுத்தார். சற்று நேரத்தில் அந்த நோயாளி செல்லத்துரை சுவாமிகளின் காலில் விழுந்து ‘தான் நீண்ட காலமாய் தீராத வயிற்று வலியால் மிகுந்த அவதிப்பட்டதாயும். தங்கள் அருளால் இப்போது பூரணசுகம் பெற்றேன்’ என்றும் போற்றினார். இது பொல இக்காலத்தில் பல ஆத்மீக அனுபவங்கள் செல்லத்துரைக்குக் கிட்டிற்று.இறை இன்பத்தைத் தேடி பாரதம் முழுவதும் யாத்திரை செய்தார் சிதம்பரத்தில் சிவகாமிஅம்பாள் ஆலயத்துள் பிள்ளையார் சந்நதியில் வழிபாடாற்றிய போது ஆச்சரியமாக ஒரு பெண் விநாயகருக்குப் பூஜை செய்து மோதகப்பிரசாதமும் வழங்கி மறைந்தார் (சிதம்பரத்தில் பெண்கள் கருவறையுள் செல்வதில்லை என்பதுடன் பூஜை செய்வதுமில்லை) தனக்கு அவ்வாறு அருளியவர் சிவகாமித்தாயாரே என்று அறிந்து மனம் நெகிழ்ந்தார்..ரமணாச்சிரமத்தில் சில காலம் தங்கியிருந்து பின்னர் பனி நிறை திருமலையான இமயமலைச்சாரலில் தவம் செய்யச் சென்றார் அங்கே ஒரு நாள் நேரடியாகக் காட்சியளித்த யோகர்சுவாமிகள் ‘come home immediately’ (உடனே வீட்டிற்கு வா) என்று ஆணையிட்டு மறைந்தார் இதனால் யோககுருநாதன் கட்டளைப்படி யாழ்ப்பாணம் வந்து யோகர்சுவாமிகளைச் சந்திக்க கொழும்புத்துறை சென்றார். இவரின் வரவை எதிர்பார்த்து இருந்த யோகர் “சிவத்தொண்டனுக்கு நல்ல ஆள்” என்று கூறி பேரன்போடு வரவேற்றார்.இக்காலத்தில் யோகர் பெருமானின் திருமுன்றலில் செல்லத்துரை ஆன்மீகத்தில் வளர்ந்து வந்தார்.‘நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்லபொல்லா வினைகள் போக்குதற்கே’என்பதையுணர்ந்து கல்லூரி அதிபராய் சமூகமதிப்புப் பெற்றிருந்த சுவாமிகள் சுவாமிகளின் கட்டளையை தலை தாங்கி சிறுதுண்டு இடையுடுத்தி வீதியில் பிச்சை ஏற்கவும் தயங்காத குருபக்தி மிக்கவராய் விளங்கினார்.சிலகாலத்தில் செல்லத்துரையின் பற்றும் பாசமும் பந்தமும் அகற்றி ‘ஸந்நியாசதீட்சை’ அளித்த யோகர் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்புச் செங்கலடியிலும் உள்ள சிவத்தொண்டர் நிலையங்களுக்குப் பொறுப்பாகவிருந்து பாத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்.இக்காலத்தில் செல்லத்துரை சுவாமிகள் நிலையத்திலிருந்து மாதம் தொறும் வெளியாகிற ‘சிவத்தொண்டன்’ இதழுக்கு ஆங்கிலத்திலும் தமிழிலும் அரிய பெரிய கட்டுரைகள் எழுதி வந்ததுடன் மொழிபெயர்ப்பு முதலாய பணிகளிலும் ஈடுபட்டார். அரசருள் அரசராய் ஆண்டியுள் ஆண்டியாய் ((a king of the king beggar of begger) வாழ்ந்து காட்டினார்.சமயப்பணிகளுக்கு அப்பால் சமூகப்பணிகளிலும் ஈடுபட்டு வந்த சுவாமிகள் மிகுந்த எளிமையானவர். புகழுரையை சிறிதும் விரும்பாதவர் இவரிடம் பல ஸ்ரீராமகிருஷ்ணமிஷன் துறவியரும் கிறிஸ்தவ அருட்தந்தையர்களும் மிக மரியாதையோடு வந்து ஆன்மீகம் பற்றிப் பேசி மகிழ்வர்.தன்னைப் பற்றி பிரபலம் செய்ய இவர் எவருக்கும் அனுமதி தரவில்லை. 2002லிருந்து யாழ்ப்பாண சிவதொண்டர் நிலையத்திலேயே நிலையாய் அமர்ந்து ஆன்மீக அலை பரப்பிய இவ்வருள் முனிவர்தமது 92வது வயதில் 2006ல் சிறிது சுகவீனமுற்றார். தான் சமாதியடைய முன்னைய நாள் சுகவீனமுற்று படுக்கையிலிருந்த போதும் தன்னருகிலிருந்தோரிடம் சிரித்தவாறே ‘பக்கத்திலிருந்து எதால உயிர் போகுது எண்டு பாக்கனும்’ என்று நகைச்சுவையோடு மரணத்தை விளையாட்டாகக் கருதிக் கூறினார்.பங்குனி மாதம் முழுமதிநாளில் அத்தத்திருநாளில் சமாதிநிலை பெற்றார் சுவாமிகள். எனினும் இன்னும் சாவா மூவாச் சிங்கமாக சற்குருவாய் நின்று எல்லோரையும் நல்லாற்றுப்படுத்தி அனுக்கிரகிக்கிறாhர் சீர்வளார்சீர் செல்லத்துரை சுவாமிகள்செல்லத்துரை சுவாமிகள் தமது இறுதிக்காலத்தில் அடிக்கடி நீர்வேலி அரசகேசரியானின் திருக்கோவிலுக்கு வந்திருக்கிறார்கள். பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிருக்கிறார்கள். சுவாமிகளைத் தம் சத்குருநாதராக ஹிருதயத்தில் வைத்து பல நீர்வேலி அன்பர்கள் வழிபாடாற்றி வருவதும் கூற வேண்டியதே.சுவாமிகள் நம்மையும் நல்வழிப்படுத்த அவர் பாதம் இறைஞ்சுவோம்.பல்லவி
வழுக்கி வழுக்கிச் சென்றவென் மனத்தை
இழுத்து இழுத்து இரட்சித்த யோகனே
சரணங்கள்
ஏங்கித் திரிந்த என்இன்னல்கள் போக்கினாய்
ஓங்கியுயா்ந்தவோர் இன்னொளியாயினாய்
தூங்கிக் கிடந்த தூசு துலக்கினாய்
தாங்கினாய் அடியேனையும் தஞ்சமாய் (வழுக்கி)
ஒழுக்கம் உற்றவர் ஓம்பிடும் ஒருவா
ஒழுக்கம் அற்றவன் ஓம்பலும் பொறுப்பாய்
பழுத்த மனத்தரைப் பாலிக்கும் பண்பாய்
உழுத்த மனத்தனை ஓம்புவாய் உன்பால் (வழுக்கி)
வளர்ந்த குழந்தையாய் வாழ்ந்திடும் வம்பனை
தளர்ந்திடாதென்றும் தாங்கிடும் சம்புவே
அளந்தறிந்திட அரியதோர் நம்பனே
உளம் தனிலுறை ஒண்சுடர் செம்பொனே (வழுக்கி)
-சிவசிந்தனை-
( சுவாமிகளின் இவ்வாண்டுக்கான குருபபூஜை 29.03.2010 பூரணைதினத்தன்று நீர்வையூர் பக்தர்களாலும் மட்டக்களப்பு செங்கலடி மற்றும் யாழ்.வண்ணார்பண்ணை சிவத்தொண்டன் நிலையங்களிலும் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது)
எழுத்துநீர்வை மயூரகிரி.

Thursday, March 18, 2010

வைதீக இசைக்குழுக்கள்
ஒரு பத்தாண்டுகள் முன்பு மடோன்னாவின் ஷாந்தி அஷ்டாங்கி என்கிற பாப் பாடல் வெளியான போது, டெக்னோ இசையில் சம்ஸ்க்ருத ஸ்லோகமா என்று ஆச்சரியப்படும் படி இருந்தது. இது போன்ற சம்ஸ்க்ருத ஸ்லோகங்களையும், வேத மந்திரங்களையும் இசைக்கும் குழுக்கள் உலகமெங்கும் கிளம்பி இருக்கின்றன.இந்த வகை இசை Vedic Metal என்று இசையில் ஒரு தனி வகையாகவே அழைக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் இல்லாமல், அமெரிக்கா – ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், மலேசியா என்று உலகமெங்கும் இது போன்ற இசைக்குழுக்கள் புதியவகையில் இசை அமைத்து மேடைகளிலும், ஆடியோ சீடீகலாகவும் வெளியிட்டு வருகிறார்கள். Help- sankatham
புதிய சமஸ்க்ருத திரைப்படம்பிரபோத சந்த்ரோதயம் என்கிற பதினொன்றாம் நூற்றாண்டில் ஸ்ரீகிருஷ்ண மிஸ்ரரால் இயற்றப்பட்ட காவியத்தை கதையின் அடிப்படையாக கொண்டு சமஸ்க்ருதத்தில் புதிய திரைப்படம் ஒன்று தயாரிக்கப் படவுள்ளது. சுமார் ஒரு கோடி செலவில் நூறு நிமிடங்களுக்கு ஓடும் அளவில் இந்த திரைப்படம் தயாரிக்க திட்டமிடப் பட்டுள்ளது.பிரபல கன்னட இயக்குனர் திரு கே.எஸ்.எல். சுவாமி அவர்கள் இத்திரைப்படத்தை இயக்கி வெளியிட உள்ளார். எண்பதுகளில் சமஸ்க்ருதத்தில் தொடர்ந்து மூன்று படங்களை இயக்கிய திரு. ஜி.வி. அய்யர் அவர்களுடன் பணிபுரிந்து வந்த திரு. கே.எஸ்.எல்.சுவாமி அவர்கள் அதே பாணியில் இந்த புதிய சமஸ்க்ருத திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்.சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகள் இந்த திரைப்பட துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். சனாதன தர்ம வர்த்தினி என்கிற சமூக அமைப்பு இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்த அமைப்பின் இயக்குனர் திரு. சி.வி.எல் சாஸ்திரி அவர்கள், இத்திரைப்படத்துக்கு நிதி உதவி செய்யுமாறு சமஸ்க்ருத ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
“இந்துக்குருமார்கள் காலமாற்றத்திற்கேற்ப பல்துறைப்பட்ட தகுதியும் திறமையும் உடையவர்களாக மாறவேண்டும்
பேராசிரியர்.பொன்.பாலசுந்தரம்பிள்ளை
இந்துக்குருமார்கள் காலமாற்றத்திற்கேற்ப தங்களை தகுதியும் திறமையும் பொருந்தியவர்களாக மாற்றிக் கொண்டு நமது சமூகத்தை வழிகாட்டுபவர்களாகத் திகழ வேண்டும் என்று தெரிவித்தார் முன்னைநாள் யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தரும் பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சிகள் நிலையப் பணிப்பாளருமான பேராசிரியர்.பொன்.பாலசுந்தரம்பிள்ளை.
அண்மையில் யாழ்.ஆனைப்பந்தியிலுள்ள சர்வதேச இந்துக்குருமார் ஒன்றியத்தின் மாதாந்த ஒன்றுகூடலும் வேதாகமப்பரீட்சையில் சித்திபெற்றோருக்கான சான்றிதழ் வழங்கலும் கௌரவிப்பும் இடம்பெற்ற போதே பேராசிரியர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்
ஒரு அமைப்பு ரீதியாக ஒன்றுபட்டு நமது சமயத்தின் சார்பில் சர்வதேச அரங்கில் பேசவல்லவர்களாகவும் சிறந்த கல்வியறிவும் ஆளுமையும் உடையவர்களாகவும் இந்துக்குருமார்கள் திகழ வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார்.

பிரம்மஸ்ரீ.ப.மனோகரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ப.சிவானந்தசர்மா வரவேற்புரையாற்றினார். யாழ்.வலய கல்விப்பணிப்பாளர் திருமதி.வேதநாயகம் சிரேஷ்டசட்டத்தரணி தவபாலன் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி அதிபர் ஆறு.திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சிரேஸ்ட குருமாரான பிரம்மஸ்ரீ .ஜ.மஹேஸ்வரக்குருக்கள் தாணு.மஹாதேவக்குருக்கள் யாழ்.பல்கலைக்கழக இந்துநாகரீகத்துறைப் பேராசிரியர்.ம.வேதநாதன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

ஏராளமான குருமார்களும் ஆர்வலர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் புதிதாக சட்டத்தரணியாக பதவியேற்ற ஜோதீந்திரக்குருக்கள் சிவராமசர்மாவும் பதவியுயர்வு பெற்ற உதவிப்பதிவாளர் நாயகம் பிரம்மஸ்ரீ.சதாசிவஐயர் அவர்களும் கௌரவிக்கப்பட்டனர். சென்ற மாதம் இடம்பெற்ற வேதாகமப் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கலந்து கொண்ட பலராலும் உலகளாவியரீதியில் இந்து மதத்தின் இன்றைய நிலை பற்றிப் பலவாறான கருத்துக்கள் வழங்கப்பட்டது. உலகத்தில் நமது மதத்திற்கு ஏற்பட்டு வரும் பலவித நெருக்கடிகளையும் கருத்தில் கொண்டு அதற்கேற்ப செயற்பட வேண்டும் என்பதும் பிற மத குருமார்களுக்கு நிகராக இந்துக்குருமார்களும் தம்மைப்பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் இவர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவேண்டும் என்பதுமாக பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன.
மேற்படி குருகுலமானது சென்ற 2001ம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு வேதம் ஆகமம் ஜோதிஷம் முதலிய ஆன்மீக குருத்துவக்கல்வி மட்டுமல்லாது ஆங்கிலம் சிங்களம் கணனி என்பனவும் கற்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்துக்கள் என்ற வகையில் வெறுமனே கோயில் பூசை வழிபாடுகளுடன் நின்று விடாமல் இன்னும் இவைகளைப் பற்றியும் நாம் சிந்திக்கவேண்டும். குட்டுப்படுவதும் மீடியாக்களால் கேட்பாரின்றி விமர்சிக்கப்படுவதும் தான் இந்துக்களின் நிலையல்ல… எவ்வளவு நாள் தூங்கிக் கிடப்பது? வீரவிவேகானந்தனாய் வீரமுழக்கம் செய்ய வேண்டிய காலம் இது.
தகவல்- நீர்வை .தி.மயூரகிரி